
துர்க்கை,சிவன் பார்வதி, ராணி என பலவித பொம்மைகளை வரிசையாக எடுத்து கூடையில் அடுக்கினாள் வடிவு. நான் தான் கூடையை சுமப்பேன் என பிடிவாதம் செய்த குழந்தை கையில் பிளாஸ்டிக் சூலாயுதத்தை கொடுத்து சமாதானம் செய்தாள். “
முந்தானை எடுத்து இடுப்பில் சொருகினாள் கூடவே குழந்தையையும் சொருகி கொண்டாள்.
அந்த தெருவில் பெரிய பெரிய பில்டிங் உயர்ந்து இருந்தது. “பொம்மே பொம்மே”, என அவள் கூவியும் ஒருத்தரும் வரவில்லை. நவராத்திரி சீசன்ல கூட பொம்மை வாங்க ஆள் இல்லாம போச்சே. நொந்துக் கொண்டாள்.
திடீரென்று லஷ்மி மாமி நினைவிற்கு வந்தாள். புடவை , குழந்தைக்கு சட்டை எல்லாம் தருவாங்க.இதே தெருல கடைசி வீடு அவங்களோடது போய் பார்ப்போம் என நடந்தாள் அவள். மாமி என குரல் கொடுத்தாள். ஒரு இளைஞன் வெளி வந்தான். இவளை பார்த்தும் உள்ளே சென்றுவிட்டான். ஏமாற்றத்துடன் திரும்பியவளை சட்டென நிறுத்தியது அந்த குரல்.
“நீங்க வழக்கமாக கொடுக்கிற வடிவு அக்கா தானே. கேட்டவுடன் கந்தன் பொம்மை செய்ய மண் எடுக்கப் போகும் போது எதிரே லாரி அடிச்சு போட்டது, காலில் அடிப்பட்டு படுக்கையில் இருப்பது எல்லாவற்றையும் சொன்னாள். குலத்தொழில் இதை தவிர வேற ஏதும் தெரியாதுங்க என புலம்பினாள். ஒரு நிமிஷம் என்று உள்ளே போனவன் மொபைலுடன் வந்தான். பொம்மைகளை பற்றியும் பல வருஷமா நவராத்திரி கொலுக்கு வாங்குறேன். கைராசி என்றெல்லாம் பேசி ஒரு ரீல்ஸை அப்லோட் பண்ணினான். சொன்ன விலையைவிட அதிகம் கொடுத்தான். காலம் மாறிப்போச்சு வியாபாரத்தில் புது புது ஐடியா கொண்டு வாங்க. அப்போதான் பிழைக்க முடியும் என அறிவுறுத்தினான்.
தம்பி , மாமி இல்லீங்களா? என கேட்டதும் அவன் சற்று நகர்ந்தான். முன் ஹாலில் மாமி போட்டோவில் சிரித்துக்கொண்டு இருந்தாள்.
வார்த்தைகள் 184
