சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/நிழல் பெண்

ஒவ்வொரு நாளும் அந்தப் பெண் தலையில் சாமி சிலைகள் நிறைந்த கூடையுடன், குழந்தையை இடுப்பில் தூக்கிக்கொண்டு அதே தெருவில் நடந்து செல்வாள்.

ஒருநாள் அந்தத் தெருவில் நடந்த கொலை வழக்கை விசாரிக்க போலீஸ், அங்கிருந்த CCTV காட்சிகளைப் பார்க்கிறார்கள்.
அதில் ஒரு விஷயம் மட்டும் வித்தியாசமாக இருந்தது.
அந்தப் பெண் நடந்து செல்லும் காட்சியில்… அவளுக்கு மட்டும் நிழல் இல்லை.

ஆனால் அவள் இடுப்பில் இருந்த குழந்தைக்கும், தலையில் இருந்த கூடைக்கும், தெருவில் சென்ற ஒவ்வொருவருக்கும் நிழல் இருந்தது.
போலீஸ் அவளைத் தேடுகிறார்கள்.
அவள் வீட்டை அடைந்ததும், வீடு பூட்டி இருந்தது. குழந்தை வாசலில் விளையாடி கொண்டு இருந்தது.

ஜன்னல் வழியே , பல வருடங்களுக்கு முன்பு இறந்துபோன ஒரு பெண்ணின் புகைப்படம் சுவரில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார்கள்.

சி சி டிவியில் நிழல் இல்லாமல் நடந்து சென்ற பெண், அந்தப் புகைப்படத்தில் இருப்பவள்தான்.
அவள் இடுப்பில் இருந்த குழந்தை மட்டும் உண்மையானது.

அந்தக் குழந்தை போலீஸிடம் ஒரு வார்த்தை சொல்கிறது,

“அம்மா மூன்று வருடத்துக்கு முன்னாடி இறந்துட்டாங்க. அம்மா பொம்ம வித்தாங்க ….தினமும் இங்க வந்து எனக்கு சாப்பாடு கொடுத்து அவங்க என்னை பள்ளிக்கு கூட்டிட்டுப் போறாங்க.”

எழுதியவர்

125 வார்த்தைகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன