
அழகிய சிங்கரின் என்பா
(நேபாளம் இனி வேண்டாம்)
(1)
விமான விபத்துகள் அங்கே பஞ்சமில்லை,
இயற்கை சீற்றங்களுக்கு ஏதும் குறையுமில்லை,
நோபல் பரிசு கொடுத்தாலும்,
நேபாளம் இனி வேண்டாம்.
(2)
பூகோளம் என்ன நினைத்தது தெரியவில்லை,
போர்க்கோலம் போட நினைத்ததா புரியவில்லை,
ஓலமிட வைத்தது உலகை
நேபாளம் இனி வேண்டாம்.
(3)
சிவனின் தலை சரிந்தது காரணமா?
தலையெழுத்தை எழுதி வைத்தவன் காரணமா?
காரணம் எதுவாயினும் கவலையில்லை,
நேபாளம் இனி வேண்டாம்.
(4)
மேகம் வெடித்தாலே பூமி தாங்காது…
இமைகள் சரிந்தாலே இதயம் தாங்காது…
இமயம் உருகினால் எப்படி?
நேபாளம் இனி வேண்டாம்.
