சுஶ்ரீ/யாருக்காக?

ருக்மணி கூடைல வைக்கல் பரப்பி பொம்மைகளை அழகா அடுக்கினா,ஒவ்வொரு பொம்மைக்கும் நடுவே பேப்பர் கட்டிங்குகள்.
ஒண்ணுக்கொண்ணு உரசி கலர் போகாம இருக்கணுமே. பானு தூங்கிட்டிருக்கா, முனியன் காலைலயே கட்டிட வேலைக்கு புறப்பட்டு
போயிட்டான். செலவு போக (வேற என்ன செலவு குடிதான்)கொண்டு வந்து கொடுக்கற 100 ரூபாய் போதலை.
அதனாலதான் பொம்மை கூடையை தூக்கிட்டு வீதி வீதியா அலையறது,பானுக் குட்டி இடுப்புல.
மேட்டுத் தெரு பக்கம் மட்டும் போக மாட்டா,அவ்வளவு ரோஷம்.பிறந்து வளந்த வீடு,பொண் குழந்தைனு ஆசையா வளத்த பெற்றோர்
.எப்பவும் சண்டை பிடிச்சாலும் அக்கா அக்கானு சுத்தி வந்த தம்பி இத்தனை பேரையும் உதறித் தள்ளிட்டு இந்த முனியனோட ஓடி வந்தது தப்புனு அப்பத் தோணலை.
பானுவும் பிறந்தவுடனே தோணுது,என்னை எவ்வளவு செல்லமா வளத்தாங்க,அப்படி இந்த குட்டிக்கு செய்ய முடியலையேனு துக்கம் துக்கமா வரும்.
அம்மா கொலு பொம்மை, அழகழகா கொலு பொம்மைனு கத்திட்டு தெருவுல நடக்கறப்ப தம்பி வேலு ஓடி வந்தான்,
”அக்கா,அப்பாக்குனு”
அவன் கூட ஓடினாள், என் வீடு என் அப்பா தளர்ந்து போய் கட்டிலில்“ஏம்மா என்னை விட்டுப் போனே,
இத்தனை பாத்துப் பாத்து சேத்ததெல்லாம் யாருக்காக?நீ இப்படி தெருத் தெருவா அலையவா?
“தாத்தானு குழந்தை காலை கட்டிண்டது.”

127

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன