முனைவர் என். பத்ரி/ வேலவன் இருக்க கவலை ஏன்?

வனஜா ஒரு பொம்மை வியாபாரி. நவராத்திரி காலங்களில் மட்டும் பொம்மை விற்பவள்.
விரைவில் தொடங்க இருக்கும் நவராத்திரிக்குப் பொம்மைகளைத் தூக்கிக்கொண்டு நகரத்துக்குச் சென்று
பொம்மைகளை விற்கக் கிளம்பி விட்ட வனஜா
நகரத்து வீதிகளில் நடந்து செல்கிறாள் . இடுப்பில் இருக்கும் இரண்டு வயதுக் குழந்தை,’அம்மா பசிக்குது ‘. என்கிறது.
வனஜாவோ,: ஒரு பொம்மையாவது விற்கட்டும்.என் கையில் காசு இல்லை’ என்கிறாள் குழந்தையிடம்.
பொம்மை கூடையில் இடம் இல்லை அதனால் குழந்தை கையில் ஒரு வேல். அதை விற்றால் கூட பரவாயில்லை என்று குழந்தை,
‘ வேல், வேல்’ என்று கூவிக்கொண்டே செல்கிறது. இதைக் கேட்ட முருகப்பெருமான் பெருமான் தன் பெயரைக் கனிவுடன் உச்சரிக்கும்
குழந்தைக்கு உதவுவதற்கு மனம் இறங்கினான். இதோ இன்னும் சில நொடிகளில் வேலவன் அருளால்கூட
காலியாகி விடும் பாருங்களேன் . பிறகு என்ன?
வனஜாவின் கை நிறையப் பணம்தான்.

93

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன