
கூடை நிறையப் பொம்மைகளை வைத்துக் கொண்டு தனக்குள் பேசியபடி மகன் மாதவனையும் கூட்டிக் கொண்டு
மகளிர் குழு தலைவி வீட்டிற்கு நடந்தாள் ராசாத்தி.
” இந்த முறை மகளிர் குழு தலைவி பொம்மை செய்யப் பெரிய ஆர்டர் தந்தால் பிரச்சனை தீரும். “
குழந்தை மாதவனைப் பள்ளியில் சேர்ப்பது பற்றிய சிந்தனை ஓடிக் கொண்டே இருந்தது. பள்ளிக் கட்டணம்,
சீருடை என்று பெரும் தொகை தேவைப்பட்டது .
“ஒரு வாரத்திற்குள் கட்ட வேண்டுமே!”
ராசாத்தி மகா கெட்டிக்காரி. பொம்மைகள் செய்து, பல ஊர்களுக்கு நடந்தே சென்று,
விற்று குடும்பத்தைக் காப்பாற்றுகிறாள்.
கிருஷ்ண பக்தை .
மாமியார் மங்களம், “ஏண்டி ராசாத்தி கண்ணாடி உடைந்து விட்டது.
வாங்கித் தா,” என்றபடி வந்தாள்.
“சீக்கிரம் வாங்கித் தரேன். ”
இன்று வரை பணம் சேர்க்க விடாமல், மாமியாரும்,
கணவன் முருகேசனும் எப்போதும் செலவு வைத்துக் கொண்டிருந்தனர்.
மகளிர் குழுத்தலைவி ஜெயம் , ” ராசாத்தி ஒரு பெரிய ஆர்டர் வந்தால் செய்ய முடியுமா?
இஸ்கான் இயக்கம் நம் ஊரில் கண்காட்சி நடத்துகிறார்கள்.
கிருஷ்ண லீலைகள் பொம்மை செய்து தர வேண்டும்.
தந்து அதைப் பற்றிய விளக்கமும் நீ கூற வேண்டும்,” என்று கேட்டாள்.
ராசாத்தி மகிழ்ச்சியுடன், “ரொம்ப சந்தோஷம் மா ..நாளைக்கே ஆரம்பிக்கிறேன்.” என்றாள்.
“பொறு அந்தந்த லீலைகளுக்குரிய கதையும் அதனுடன் வைக்க வேண்டும்.”
” நிச்சயம் கிருஷ்ண உலகம் செய்யும்போது
என் மகனின் மனதில் கிருஷ்ண பக்தியை உண்டாக்குவேன்.”
அந்த ஆண்டு இஸ்கான் கண்காட்சியில் ராசாத்தியின் கிருஷ்ண உலக பொம்மைகள் இடம் பெற்று
பாராட்டைப் பெற்றது . அதன் மூலம் நிறையப் பொம்மை வாங்க ஆர்டரும் கிடைத்தது.
177
