
நன்றாகப் பாருங்கள் .கேசவப்பே ரானை
நன்றாகப் பாருங்கள் கேசவனுள் யானை
அன்றோர்நாள் அடர்காட்டு முரடனென் றானை
அப்படியே குருவாயூ ரப்பரடி யானை
மன்றாடிக் கேட்டுண்ண மறுத்திட்டோ ரானை
மணிக்கண்ணன் வெண்ணைதர உண்டபெரும் யானை
என்றென்றும் குருவாயூர் சேவகனா னானை
ஏப்போதும் கண்ணணுக்குத் தோழனான யானை
ஏகாத சிவிரதமி ருந்தபக்தி யானை
என்றென்றும் சீவேலித் தொண்டரென் றானை
நோகாது பக்தரினைக் காத்தபே ரானை
குருவாயூர் ஏகாத சிமரணமுற் யானை
ஆகாயப் பிறைமஞ்சள் தந்தமளித் தானை
அன்படிமை குருவாயூ ரப்பனுக்கென் றானை
பாதாதி கேசமெனப் பாடுபொரு ளானை
பரந்தாமன் கேசவனே பாடவைத் தானே..
(05.09.2026)
(சுவாமி ஐயப்ப தாசன் ஶ்ரீ அரவிந்த சுப்பிரமணியன் அவர்கள் குருவாயூர் கேசவனின் பெருமைகளைச் சொல்லக் கேட்டு எழுதிய கவிதை.)

அருமை