ஹரணி தஞ்சாவூர்/கிருஷ்ணரே தவழ்ந்து வருக

1
கிண்ணம் நிறைய வெண்ணெய் உண்டு
கன்னம் நிறைய முத்தம் உண்டு
எங்கள் எண்ணம் ஏற்றங் கொள்ளக்
கிருஷ்ணரே தவழ்ந்து வருக.

2
வாயில் உலகம் காட்டி நின்றாய்
கோயில் வாயிலில் வணங்கி நிற்கக்
கோகுலம் காக்க லீலைகள் செய்த
கிருஷணரே தவழ்ந்து வருக.

3
வித்தைகள் செய்யும் மாயக் குழலோனே
தத்தை மொழியில் சங்கடம் நீக்கி
சிந்தை எல்லாம் சிறக்க நிற்கும்
கிருஷ்ணரே தவழ்ந்து வருக.

4

பாரதப் போரில் நியாயம் பேணி
தருமக் கீதையை அறமாய்ச் சொல்லி
அழைத்த குரலுக்கு வருவேன் என்ற
கிருஷணரே தவழ்ந்து வருக.

5

எத்தனை அவதாரம் எல்லாம் அற்புதம்
சிற்றுயிர்க்கும் ஈந்த அன்பின் தத்துவம்
எந்தப் பிறவியிலும் எங்களைக் காத்திடவே
கிருஷ்ணரே தவழ்ந்து வருக.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன