செ.புனிதஜோதி/கிருஷ்ண ஜெயந்தி

வாசற்படியில்
அரிசி மாவில்
கால் பதித்துவிட்டு
உள்ளே நுழைகிறேன்.

முந்தானையில்
ஒரு கையும்,
வாயில் பெருவிரலுமாக
பின்தொடர்கிறான்
கண்ணன்.

பசிக்குமே என
பதறுகிறது
என் மனம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன