வே. கல்யாண்குமார்/குடியோ.. குடி..!

சந்தோஷத்தில் குடிக்குறான்..
துக்கத்திலும் குடிக்குறான்..
கல்யாணத்துலக் குடிக்குறான்..
சாவு வீட்டிலும் குடிக்குறான்..!

குடிக்காதே என்று சொன்னால்
கேட்பாருண்டோ நாட்டிலே..
குடலு வெந்து போகும் வரையிலும்
விட மாட்டான் பாட்டிலை..!

காலையிலே எழுந்தவுடனே..
கைகளெல்லாம் நடுங்குது..
கடை திறக்கும் முன்னாலேயே
கால்கள் அங்கு ஓடுது..!

கடைகளையே இழுத்து மூட
எவனுக்குமே துப்பில்லே..
கஜானாவை நிரப்புவதால்
குடிப்பவன் மேல் தப்பில்லே.!

யாரைச் சொல்ல குத்தமென்று
எனக்கு இங்கே புரியலே..!
ஊருக்குள்ளே போதை ஒழிய
பாதை இன்னும் தெரியலே..!

போதையில்லா உலகத்தையே
தலைமுறைகள் பார்க்கனும்.!
பாதையெல்லாம் பண்புநலம்
பாரதத்தில் செழிக்கனும்.!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன