ஹரணி தஞ்சாவூர்/நல்லாசிரியர் நலம் போற்றுவோம்

1

உண்மை பேசி உளமாரப் பாடத்தை
மண்டையில் ஏற்றி மதிப்புற வைப்பார்
எதிர்பார்க்காப் பண்பில் இருப்பார் எப்போதும்
நல்லாசிரியர் நலம் போற்றுவோம்.

(2)
நேரம் தவறார் நெஞ்சுரம் மிக்கவர்
வஞ்சனை இல்லா அன்பில் நிற்பார்
பேதங் காட்டாப் பெருந் தன்மையாளர்
நல்லாசிரியர் நலம் போற்றுவோம்.

(3)
கண்டிப்புக் காட்டுவார் கனிவுங் கொள்வார்
ஏழைப் பிள்ளைக்கு எல்லாம் செய்வார்
படிக்கும் பிள்ளைக்குப் பரிசுகள் தருவார்
நல்லாசிரியர் நலம் போற்றுவோம்

(4)
உருவாக்கும் பிரும்மா உண்மை சிற்பி
சமமாய்ப் பேணி சரித்திரம் உரைப்பார்
வறுமையில் செம்மை வளர்த்துக் காட்டுவார்
நல்லாசிரியர் நலம் போற்றுவோம்.

(5)
ஆசிரியர் அறத்தின் முத்திரை அன்பின்
ஆசிரியர் அழகிய சித்திரம் கற்றலில்
ஆசிரியர் கடவுளுக்கு இணை அந்த
நல்லாசிரியர் நலம் போற்றுவோம்.

ஹரணி தஞ்சாவூர்-

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன