பாலசாண்டில்யன்/கண்ணாடி மனம்

வீட்டின் அமைதி ஷியாமை நெரித்தது. ராதிகா காபியைக் கொண்டுவந்து வைத்த
ஓசை கூட இடிபோலக் கேட்டது.
“என்னாச்சுங்க? ஆபீஸ்ல இருந்து வந்ததுல இருந்தே பிரமை பிடிச்ச மாதிரி இருக்கீங்க?”
ஷியாமின் தலைக்குள் எண்ணங்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதின. அவனது பார்வை எதிரே
அமர்ந்திருந்த ராதிகா மற்றும் பக்கவாட்டில் நின்ற அவளது நிழலின் மீது நிலை குத்தியிருந்தது.
மைத்திரி… நேற்று வரை தன்னிடம் பணிவாகக் கற்றுக்கொண்ட அதே டீம் மெம்பர்.
சிறு கண்டிப்பைக் கூடத் தவறாகச் சித்தரித்து, இன்று எச்ஆரிடம் ‘போஷ்’ புகார் அளித்திருக்கிறாள்.
சஸ்பென்ஷன் உத்தரவு ஷியாமின் நற்பெயரைக் குலைத்துப் போட்டிருந்தது.
அவமானம், உண்மை, பயம் என எல்லாம் கலந்து உலகம் தலைகீழாகச் சுழன்றது.
நெஞ்சின் பாரம் தாங்காமல் நடுங்கும் கையை மார்போடு அணைத்தான்.
“ராதிகா…” தொண்டைக்குள் வார்த்தை சிக்க, நேருக்கு நேர் பார்க்கத் துணிவின்றித் தலை சாய்த்தான்.
“மைத்திரி என் மேல கம்ப்ளையிண்ட் பண்ணியிருக்கா… என்கொயரி வச்சிருக்காங்க.”
ராதிகா திகைத்துப் பார்த்த நொடி,
தன் முகம் ஆயிரம் துண்டுகளாக உடைந்து
சிதறுவதை அவன் உணர்ந்தான்.

113

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன