
எனக்கு சரசாவுடன் குடும்பம் நடத்துவது அவ்வளவு சுலபமாக இருக்கும் போதே தோன்றவில்லை. அவள் எதற்கெடுத்தாலும் சிடுசிடு வென்று விழுகிறாள். இதற்கெல்லாம் காரணம் மூன்றாவது குழந்தை பிறந்ததுதான். மூன்றாவது குழந்தைப் பிறக்குமென்று அவள் முதலில் நம்பவில்லை. அது தெரிந்தவுடன் அவள் நடவடிக்கை மாறத் தொடங்கியது. குறிப்பாக என் மீதுதான் கோபம். எதற்கெடுத்தாலும் எரிந்து எரிந்து விழுந்தாள். மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தையாகப் பிறந்தது. அதைப் பார்த்து கடுங் கோபத்தைக் காட்டுவாள்.
அந்தக குழந்தை அவளைப் பார்த்துப் பயந்து பயந்து என்னிடம் ஓடி வரும்.
எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. இந்த சின்ன வயசுல அவனுக்கு எப்படி ஓவியம் வரையும் திறமை வந்தது என்று.
ஒருமுறை என்னிடம் தான் வரைந்த ஒரு படத்தைக் காட்டினான்.
மழலையில் அம்மாவிடம் காட்டாதே என்று வேண்டிக்கொண்டான். அந்தப் படத்தைப் பார்த்து நான் திகைத்து விட்டேன். அவன் சரசாவை அரக்கி மாதிரி வரைந்திருந்தான்.
95
