
ஸ்வேதா ஒரு கற்றல் குறைபாடு உள்ள பெண். மற்றவர்களைப் போலவே அவள் அம்மா, அப்பாவும் அவளது குறையை அறியாமலேயே அவளைச் சாதாரணர்கள் படிக்கும் பள்ளியிலேயே சேர்த்திருந்தனர்.
மீச்சிறு மார்க் வாங்கிப் பத்தாம் வகுப்பு முடித்தாள்.அவள் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போதுதான் அவள் வகுப்பாசிரியை அபிராமி பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் அவளைப் பற்றிக் கூறி, அவளைச் சற்றுக் கூடுதலான அக்கறையுடன், அன்புடன் கவனிக்க வேண்டுமென்றாள்.
அன்று அவர்கள் அப்பார்ட்மெண்ட் குழந்தைகள் தினவிழாவில் ஓவியப் போட்டி முடிந்து எல்லா ஓவியங்களும் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன.அங்கே சுவரில் தொங்கிய ஓவியங்களில், வர்ணங்களை அள்ளித் தெளித்த, வரையறுக்க முடியாத வடிவங்களில் இரு உருவங்களைக் கொண்ட ஸ்வேதாவினுடையதும் இருந்தது
நடுவராகப் பொறுப்பேற்றிருந்த பிரபல ஓவியர் துரைராஜ் எல்லாவற்றையும் பார்வையிட்டு, முதல் ,இரண்டாம் பரிசு ஓவியங்களைத் தேர்ந்தெடுத்த அவர் ,பதற்றம், குழப்பம் மனிதனுக்குள்ளே இரு குணங்கள் இருத்தல் ஆகியவற்றை விளக்கிய ஸ்வேதாவின் ஓவியத்துக்குச் சிறப்புப் பரிசு என்று அறிவிக்க, கூட்டம் வியக்க, ஸ்வேதா & கோ மகிழ்ச்சி.
அங்கே யாருக்குமே தெரியாது_ ஸ்வேதாவின் வகுப்பு ஆசிரியர் அபிராமி, தம்முடன் படித்த ஓவியர் துரைராஜிடம், கற்றல் குறைபாடுள்ள தம் மாணவியை ஊக்குவிக்கும்படி கோரியது
126
