சாந்தி சந்திரசேகரன்/வாக்குமூலம்..!

மோசஸ் என்ற புகழ்பெற்ற ஓவியர் படுகொலை செய்யப்பட்டார். ஆனால் கொலை செய்தவன் பற்றிய துப்பு கிடைக்கவில்லை.
சிறப்புக்காவல்துறை அதிகாரியான வியன், அந்த அறையைப் பரிசோதித்தான்.
அவர் வரைந்த சிதைந்த முகம் கொண்ட ஓவியம், ஏனோ வியனின் கவனத்தை ஈர்த்தது.
அவனது உதவியாளர் சண்முகம் “சார்.. ஏதோ போதைல வரஞ்சிருப்பார் போல.. பாருங்க.. முக அமைப்பே சரியில்ல” என்றார்.
தலையை உலுக்கிய வியன், “இந்த ஓவியம் அறிவுக்கூர்மை நிறைந்த, நவீன வெளிப்பாட்டியல் (Expressionism) மற்றும் கியூபிசம் பாணியில் அமைந்த ஒரு மிகச்சிறந்த படைப்பு. இது மனித மனதின் சிக்கலான உணர்ச்சிகளையும், உள்முக சிந்தனைகளையும் பிரதிபலிக்கிறது. இதைக் கூடத்தில் வைக்காமல் இங்கு வைத்திருக்க ஏதாவது காரணம் இருக்கலாம்”
“என்ன காரணம் சார்?” புரியாமல் சண்முகம் கேட்டார்.
அதில் ஒரு கண் மட்டும் மிகத் தடிமனான பெயிண்ட்டால் வரையப்பட்டிருந்தது. அந்த பெயிண்ட் பகுதியை அவன் சுரண்ட, உள்ளே ஒரு சிறிய கேமரா ஒளித்து வைக்கப்பட்டிருந்தது!
அதில் கொலைகாரனின் உருவம் மற்றும் பல முக்கிய ரகசியங்கள் இருந்தன.
அந்த ஓவியம் வெறும் கலைப்படைப்பு அல்ல, அது மோசஸ் கொல்லப்படுவதற்கு முன் விட்டுச்சென்ற மரண வாக்குமூலம்

122

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன