ஓவியமென்பது… / அப்புசிவா

“இது என்ன?”
“இது… இது வந்து, கண்ணு.”
“ஓ, சூப்பர். ஆனா ஒரு கண்ணு பெரிசா இன்னொன்னு சின்னதா இருக்கே?”
“அவன் பயந்து இருக்கான். அதான்.”
“இப்போ புரியுது. அந்த பயம்தான் அவனைச் சுத்தி கலர் கலரா இருக்குதுன்னு நினைக்கிறேன்.”
“ஆமா ஆமா.”
“அருமையா வரைஞ்சிருக்கே பாப்பா.” என்று சொல்லிவிட்டு அடுத்த குழந்தையின் ஓவியத்தைப் பார்க்க நகர்ந்த ஆசிரியர் ராதாகிருஷ்ணனை நிறுத்தினார் சக ஆசிரியர் ரவிவர்மன்.
“என்ன ராதா, அந்த குழந்தை கிறுக்கி வச்சிருக்கு, அதைப்போயி இப்படி பாராட்டறிங்க.”
“ஏன்? அதுக்கென்ன குறைச்சல்?”
“ஓவியம்னா ஒரு ஒழுங்கு, தத்ரூபம், யதார்த்தம் வேணாமா?”
“புரியல.”
“ஒரு முகத்தை அப்படியே இருக்கறமாதிரி ரியலா வரையணும்ல?”
“இது ஓவியம். அந்த குழந்தை ஒருவரின் முகத்தைக் கற்பனை செய்வதை, மனதில் தோன்றுவதை உருவமா தர நினைக்கிறா. மிகச்சிறந்த ஓவியர்கள் இதுபோலத்தான் ட்ரை பண்றாங்க. அதான் நிஜமான ஓவியம்”
“அதான் புரியலை. முகம் ஏறுக்கு மாறா, கலர் எல்லாம் கொட்டி… என்னைப்பொறுத்தவரை ஃபோட்டோ போல அப்படியே வரையணும். “
“அதக்கு ஏன் வரையணும்? செல்லுல போட்டோ எடுத்தா வருமே,” சொல்லிவிட்டு நகர்ந்தான் ராதாகிருஷ்ணன்.

(121 words)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன