அர்ஜுனன் /குற்றமும், தண்டனையும்

தினேஷுக்கு இப்போதெல்லாம் தன் முகத்தைப் பார்ப்பதற்கே பிடிப்பதில்லை.
ஜெயிலின் அந்த ஒப்பனை அறை கண்ணாடி மட்டுமல்ல, குளியலறை தண்ணீர் கூட, அவன் முகத்தை இப்படி விகாரமாகவே காட்டுகிறது.
அவன் ரீமாவை காதலித்தபோது, அவளுடன் பூங்கா, தியேட்டர் எனச் சுற்றித் திரிந்தபோது, கைப்பேசியில் எடுத்த புகைப்படங்களை நினைத்துப் பார்த்தான்.
‘இங்கே வந்தபிறகு தான் கைப்பேசிக்கு அனுமதி இல்லையே?’
ரீமா, பின்னர் அவனைக் கைவிட்டு, பெற்றோர் நிச்சயித்த நபரைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கைப்பேசியில் சொன்னபோது அவனால் உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“உன்னை ஒரு தடவை கடைசியாகச் சந்திக்க விரும்புகிறேன்”
என்று சிரித்துக்கொண்டே அவளை அழைத்தபோது, அவளும் சந்தேகம் கொள்ளாமல் வந்தாள்.
“ஒழிந்து போ” என்று சொல்லி, அமிலத்தை அவளது முகத்தில் வீசி எறிந்துவிட்டு வந்தான்.
அப்புறம் கைது, நீதிமன்றம் விசாரணைகள்.
நீதிமன்றத்தில் அவளது சிதைந்த முகத்தைப் பார்த்தபோது, அவனுக்குத் திக்கென்றது.
அன்றிலிருந்து அவன் தன் முக பிம்பத்தை எங்குப் பார்த்தாலும் அவனது விகார முகமும் அதனருகில் ஒரு ஓரத்தில் அவளது சிரித்த பளிங்கு முகமும் தெரிகின்றன.
நீதிமன்றம் அளித்த தண்டனை பத்து வருடங்கள்தான்; ஆனால் மனசாட்சி அளிக்கும் தண்டனை ஆயுள் முழுவதும்.

(123 வார்த்தைகள்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன