
எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும்
அன்பும் பண்பும் நிலைக்க வேண்டும்
நாடு செழித்து வளர வேண்டும்
இருப்பது ஒரே வாழ்க்கை !
2.
வாழ்க்கை அநித்தியம் என்று உணர்
தர்மம் நிலைக்க பாடுபடு எப்போதும்
பெரியோரை மதிக்கும் குணம் கொள்
இருப்பது ஒரே வாழ்க்கை !
வறட்சியும் வெள்ளமும் இயற்கையின் சீற்றம்
இன்பமும் துன்பமும் வருவது இயல்பு
சுயநலம் விடுத்து பொதுநலம் பேணு
இருப்பது ஒரே வாழ்க்கை !
