
வெளிநாட்டிலிருந்து வந்த நிரஞ்சனாவும், அர்ஜுனும் அந்த பங்களாவின் அழகைப் பார்த்ததும் மயங்கினார்கள்.
ஊர்க்காரர்கள் சொன்ன கதையெல்லாம் நம்பவில்லை. தேக்கு மர பர்னிச்சர்களுடன் சேர்த்து பங்களா விலைக்கு வாங்கும்போது கசக்கவா செய்யும் ..
பூட்டு போட்டிருந்த அந்தக் கதவைத் திறக்க வேண்டுமென சொன்னதை அலட்சியப்படுத்தி விட்டுத் திறந்து உள்ளே சென்றாள் நிரஞ்சனா.
ஆச்சரியம் உள்ளே சுற்றிலும் கண்ணாடிகளாகப் பதிக்கப்பட்டிருந்தன.
அவள் பிம்பம் கண்ணாடிகளில் பிரதிபலிக்க, அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கொஞ்சம் கொஞ்சமாக அவள் ஒரு முகம் மாறி வண்ணக் குழம்பாக உருவமற்று பயங்கரமாக மாறியது.
அர்ஜுன் இல்லாத போது இங்கு வந்தது தவறு.அவள் வெளியேற முயலக் கதவுகள் அடைத்துக் கொண்டன.மீண்டும் கண்ணாடியில் அவள் முகம். கதவு திறந்து உருண்டு வந்து அவள் காலடியில் நின்ற சிலிண்டர் வெடிக்க ரத்தச்சிதறல்களாக அவள் வெடித்துச் சிதறினாள்.
அந்த ஒரு கணத்தில் கண்ணாடியில் ஒரு முகம் அவளைப் பார்த்துச் சிரித்தது..
“பூர்வ ஜென்மத்தில் என் கணவனாக இருந்த அர்ஜுனைப் பறித்துக் கொண்டு இதே அறையில் என்னைக் கொன்றாயே”
என்ன நடக்கிறது என்று அறியாமல் செத்துப் போனாள் நிரஞ்சனா
