
1.
எதற்கு இந்த தீரா அலுப்பு?
யாருக்காக உங்கள் உதட்டளவு சிரிப்பு?
ஏன் இந்த பொல்லாத வேஷம்?
இருப்பது ஒரே வாழ்க்கை!
சிரித்து சிரித்து
மனம் சிறகடிக்கட்டும்!
மழலை மொழியில் உள்ளம் மிதக்கட்டும்!
கவலைகள்
காற்றோடு பறந்து போகட்டும்!
இருப்பது ஒரே வாழ்க்கை!!
நல்லாசைகளை நிறைவு செய்து கொள்!
கொடிய சிந்தனைகளை
அண்ட விடாதே!
ஒவ்வொரு நிமிடமும் வாழ்ந்து பார்!
இருப்பது ஒரே வாழ்க்கை!!
06.09.2026
