வே. கல்யாண்குமார்/டபரா செட்டு காபி.!

சிந்தனைக்கு விருந்து..
சோம்பலுக்கு மருந்து..
அதிகாலை எழுந்து..
பில்டர்க் காபி அருந்து!

பித்தலை டபரா செட்டு.
பில்டர் டிகாஷன் விட்டு
உறிஞ்சு குடிச்சுப் புட்டு
ஓடி வரான் கிட்டு.!

அம்மா போட்ட காபி..
ஆவி பறக்கும் காபி..
சும்மா கிடக்கும் மனசை
சுதிகளேற்றும் காபி..!

அப்பாவுக்கு காபி..
ஆசையோடு ஆத்தி
மெல்லக் குடிக்கும் போது
ஆகா.. பேஷ் பேஷ் காபி.!

நரசுஸ் காபி குடிச்சோம்
டபரா செட்டில் குடித்தோம்
பேப்பர் கப்பில் இன்று..
பேந்த பேந்த விழித்தோம்!

காலம் மாறிப் போச்சு..
காபி மாறாதப்பா..
டபரா செட்டுக் காபி
சுவையும் மாறாதப்பா.!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன