
வீட்டில்…
“என்னங்க நம்ம தீபக்போன்செஞ்சான். பள்ளிக்கூட ஓவிய போட்டில அவன் வரைந்த ஓவியத்துக்கு முதல் பரிசு கிடைச்சு இருக்காம்.பரிசு தரப் போறாங்களாம். நம்மள உடனே வர சொல்றான்.”
“நான் மட்டும் போறேன் நீ ஒன்னும் வர வேண்டாம் படிப்பறிவு இல்லாத முண்டம் நீ. அங்க வந்து நாலு பேரோட பேசவும் தெரியாது நீ சும்மா வீட்லையே கிட.”
“சரிங்க. “
பள்ளியில்..
“அப்பா! அம்மா வரலையா ?”
“அவளுக்கு நாகரீகமா பேசவும் தெரியாதுடா .. வர வேண்டாம்னு அடக்கிட்டேன்”
“தீபக் ரொம்ப புத்திசாலி மாணவன்.. ஆமா தீபக்…இந்த படத்தில் இருப்பது யார்யார்?”
“டீச்சர்..!அந்தப்பெரிய உருவம் என் அப்பா .அவரோடகைப்பிடியில் அடங்கியிருப்பது என் அம்மா.”
தழுதழுத்த குரலில் சொல்லிய மகனைக் குற்ற உணர்வுடன் பார்க்கிறான் அவன் அப்பா.
84
