சசிகலா விஸ்வநாதன்/இருப்பது ஒரே வாழ்க்கை

அழகிய சிங்கரின் என்பா
(இருப்பது ஒரே வாழ்க்கை)

(1)
இருப்பதே, இல்லாதது போல்தான் இருக்கிறது
இருக்கும் ஒவ்வொரு நாளும் முள்ளாக
இருக்க எப்படி நினைப்பேன்

இருப்பது ஒரே வாழ்க்கை(என)

(2)
எதிர்த்து போராட துணிவில்லை எனக்கு
கதியின்றி, நான் விதிர்த்து போகிறேன்
எதை நினைத்து கொண்டாட நான்;
இருப்பது ஒரே வாழ்க்கை(என)

(3)
இருக்கும் நாளெல்லாம் உற்சாகமாய் இரு!
நேற்று நடந்ததை நினைவிலிருந்து நீக்கு!
நாளை நம் கையிலா? நமக்கு

இருப்பது, ஒரே வாழ்க்கை

(4)

மறுக்கப் படுவதால் மருகிப் போகாதே!
ஒடுக்கப் படுவதால் ஒதுங்கி போகாதே!
ஏறு போல் எழுந்து போராடு!

இருப்பது ஒரே வாழ்க்கை.

(5)
எண்ணம் போல் வாழ்க்கை அமையும்
இன்னும், இன்னும் என்று முயன்றால்,
எட்டா கனியும் எட்டும் நமக்கு.

இருப்பது ஒரே வாழ்க்கை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன