
செதுக்கிய மூக்கும், வளைந்த புருவமும், பவளச் செவ்வாயும், குவளைக் கண்களும் இல்லாவிட்டாலும் அழகிதான் ரம்யா!
பீச், பார்க், சினிமா தியேட்டர் எனச் சுற்றிச் சுற்றி காதலித்துத் திருமணம் செய்துகொண்ட ரமேஷ், ரம்யாவுக்கு சரியான இணைதான்.
ரமேஷுக்கு ஆறு மாதம் டெபுடேஷன் – அந்த நேரம் பார்த்து, ரம்யாவின் அஜாக்கிரதையினால் வீட்டில் குக்கர் வெடித்து,அவள் முகம் முழுதும் சிதைந்து விட்டது. கோணலாகிச் சுருங்கிய மூக்கு, சொப்பு வாய், புருவங்கள் இருந்த இடத்தில் கருப்புக் காயச் சுவடுகள், மொட்டையான இமைகள், தீய்ந்த நெற்றி – உருத் தெரியாமல் மாறிய முகம்.
கண்ணாடியில் பார்த்தாலே அவளுக்கு அருவருப்பாக இருந்தது. ரமேஷுக்கு எப்படி இருக்கும்? இப்படியொரு மனைவியுடன் வாழத்தான் முடியுமா? உள்ளுக்குள் குமைந்தாள் ரம்யா.
கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, பிறந்த வீட்டுக்குச் சென்றுவிட்டாள்.
ஒரு வார டூர் முடிந்து வந்த ரமேஷ், கடிதத்தைப் பார்த்தான்.
போனில் ரம்யாவை அழைத்தான்.
“நான் உன் முக அழகைவிட, மன அழகையே இப்போதும் காதலிக்கிறேன். உடனே திரும்பி வா”
(106 வார்த்தைகள்)
