நாபா.மீரா/புதிய விடியல்

காத்மாண்டு மருத்துவமனை.

நேபாள பெருவெள்ளத்தில் அடித்துவரப்பட்டவர்களில் , உயிர் பிழைத்தோர் மற்றும் மரித்தோர் விவரம் சேகரித்து படத்துடன் ஆசுபத்திரியின் முன்பகுதியில் ஒட்டுவதிலேயே சோர்வடைந்த ஊழியர்கள் ஒருபுறம்.
பீதியுடன் அந்த அறிவிப்புப் பலகையை உற்றுநோக்கும் ஜனத்திரள் ஒருபுறம்.
திரிசூலி ஆற்றில் கரைபுரண்டு ஓடிய பெருவெள்ளத்தில் இளம்பெண் ஒருத்தி அடித்து வர அவளைத் தொடர்ந்து பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்றும் வரச் சற்றும் தாமதிக்காமல் செயல்பட்டனர் நடமாடும் மருத்துவக் குழுவைச் சேர்ந்தவர்கள்.
முதிய தாதி , இளம்பெண்ணின் கன்னத்தில் மாறி மாறித் தட்டி அவளைச் சுயநினைவுக்குக் கண் கொண்டு வந்தாள்.
அருகில் இருந்த குழந்தை அழ, சட்டென்று ஒரு உந்துதலில் மாராப்புக்குள் மறைத்து பால் புகட்டினாள்.
“இது உன்னோட குழந்தையா”, தாதி நேபாளி மொழியில் கேட்கத் தலையை இவ்வலமாக ஆட்டினாள்.
‘என் வயித்துல இருந்த குழந்தை இறந்தேதான் பிறந்துச்சு, ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் காவு வாங்கிட்ட இந்த வெள்ளம் நம்மள மட்டும் ஏன் பொழைக்க வைச்சுது?, ‘ அஷ்மிதாவின் நெஞ்சில் ஓர் கலவையான உணர்வு.
மறுநாள் விசாரணை செய்த, மருத்துவரிடம், ” ஆம் இவள் என் குழந்தைதான்”, என்று கூறிக் கையில் குழந்தையுடன் ஒரு புதிய விடியலை நோக்கிப் புறப்பட்டாள் அஷ்மிதா

131

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன