எம்.எல்.பிரபா/எதுக்கு பாராட்டு?

அன்று பிளஸ் டூ ரிசல்ட் வரப்போகுது. குமாருக்கு ஒரே பதட்டம். அவன் குடியிருக்கும் ஏழுமாடிக் கட்டிடத்தில் மொட்டை மாடிக்குச் சென்றான். “கடவுளே நான் தான் வகுப்பில் முதல் மார்க் வாங்கணும்” என்று வேண்டிக் கொண்டே நடந்தான்.
சட்டென்று ஒரு சத்தம் வட்ட வடிவில் ஒரு விண்கலம் போன்று ஒரு வாகனம் வந்து பக்கத்துக் கட்டிடத்தில் மொட்டை மாடியில் வந்து இறங்கியது. அதிலிருந்து மூன்று உருவங்கள் பார்ப்பதற்கே விசித்திரமாய் இறங்கியது.முகம் வித்தியாசமாய் இருந்தது. மனித முகம்,விலங்கு முகம், பறவை முகம் என ஒரே குழப்பம். யார்? இவர்கள்.
மூவரும் ஏதோ பாஷையில் பேசிக் கொண்டார்கள். பயத்தால் முகம் வெளிறியது .உடனே கையிலிருந்த ஃபோனில் அதைப் போட்டோ எடுத்தான். சிறிது நேரத்தில் மறுபடியும் அந்த விசித்திர உயிர்கள் வாகனத்தில் ஏறிப் பறந்தனர்.வியப்புடன் கீழே இறங்கி வந்தான்.மாமாவிடம் போட்டோவை காட்டினான்.
“வேற்று கிரக வாசிகள் ஏலியன்கள் இருக்கிறார்கள்” என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ஒருவேளை இவர்களும் ஏலியன்களோ!! என்றார் மாமா. ரிசல்ட் வந்துவிட்டது. வகுப்பில் முதல் மதிப்பெண் ஒரே சந்தோஷம். இரண்டையும் பேஸ்புக், வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்தான்.
குமார் மதிப்பெண் பெற்றதை விட எலியன் படத்திற்குத் தான் அதிகமாக வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்தன.

129

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன