
கொள்ளை அடிப்பவர் கோடியில் புரள்பவர்
இரக்கம் இல்லாத வஞ்சகர் ஏமாற்றுக்காரர்
எல்லாம் உதிர்த்தலர் அமைதி காப்பார்
நல்லவனுக்கே கோபம் வரும்.
(2)
சொந்த உறவிற்குத் துரோகம் செய்வார்
சாதிப்பற்றில் சதி செய்வார் செய்நன்றி
மறப்பார் பிணம் போல் அமைதி
நல்லவனுக்கே கோபம் வரும்.
(3)
கூடவே இருப்பார் குழியில் தள்ளுவார்
பாவம் போல் காட்டிப் பசித்திட
உண்ணும் சோற்றில் விடம் கலப்பார்
நல்லவனுக்கே கோபம் வரும்.
(4)
பணத்தாசை பெண் பித்து நாடியே ஓடுவார்
நடிப்பார் துடிப்பார் பொய்யில் புரள்வார்
எதிலும் சுத்தம் இல்லை அமைதியே
நல்லவனுக்கே கோபம் வரும்
