அழகியசிங்கர்/இருப்பது ஒரே வாழ்க்கை

தினமும் எழுந்தவுடன்
வேண்டிக் கொள்வேன்
பொழுது நன்றாகப்
போக வேண்டுமென்று
கண்ணை மூடிக்கொண்டு
கடவுளைத் தொழுவேன்

இருப்பது ஒரே வாழ்க்கை

காலையில் எழுந்தவுடன்
கடமையை ஆற்றுமுன்
கடவுளை நினைக்கிறோமா
என்றும் இல்லையே
அவன் அருளால்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

இருப்பது ஒரே வாழ்க்கை

பொய் சொன்னதில்லை
திருடியது இல்லை
ஏமாற்றியதும் இல்லை
தெரியவும் தெரியாது
சாதாரண வாழ்க்கையை
ரசனையுடன் வாழ்கிறேன்

இருப்பது ஒரே வாழ்க்கை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன