
கிருஷ்ணரின் சதுரங்க கணக்கு
கிருஷ்ணரின் விளையாட்டு ஒரு மன்னரோடு நடந்தது . மன்னரின் செருக்கை அழித்து மக்களுக்கு இணைப்பையும் ஆன்மீக புனித தலத்தையும் தந்தது .
சதுரங்கம் என்பது ஒரு வியூக பலகை விளையாட்டு .
தற்போதுள்ள செஸ் விளையாட்டு என்பது மூதாதையர் காலத்து சதுரங்க விளையாட்டே !! செஸ் விளையாட்டின் முன்னோடியான விளையாட்டே சதுரங்கம் . சதுரங்கா என்பது யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை மற்றும் காலாட்படை என ஒரு படையின் நான்கு பிரிவுகளைக் குறிக்கிறது. ஒரு பண்டைய போர் அமைப்பான அக்குரோணி, சதுரங்க அமைப்பைப் போன்றது.
காவியக் கதைகளில் பெரும்பாலும் “இராணுவம்” என்று பொருள்படும். போர் அமைப்பு, அக்ஷௌஹினி , சதுரங்காவின் அமைப்பைப் போன்றது.
இந்த சதுரங்கத்தின் மேல் அலாதி பிரியமும் கர்வமும் கொண்ட ஒரு மன்னனிடம் கிருஷ்ணரின் விளையாட்டையும் அதன் மூலம் அவருக்கு வேண்டியதை பெற்றதையும் இந்த கதை கூறும் .
தென்னகத்து துவாரகை என்று சொல்லப்படும் கேரளாவில் உள்ள அம்பலப்புழை கிருஷ்ணர் கோவிலை தேவநாராயணன் என்ற மன்னர் கட்டியதாக வரலாறு . அவர் சதுரங்க விளையாட்டில் நல்ல அறிவுள்ளவர் . அதனால் அறிவோடு கர்வமும் சேர்ந்தே இருந்தது .
ஒரு நாள் கிருஷ்ணர் ஒரு முனிவர் வேடத்தில் அந்த மன்னரிடம் வந்து தான் மிக நன்றாக சதுரங்கம் விளையாடுவதாகவும் அவரோடு போட்டியிட்டு யாரவது ஜெயிக்க முடியுமா என்றும் சவால் விட்டார் .
உடனே மன்னர் யாரும் என்னை தோற்கடிக்க முடியாது என்று கூறி அதற்கு முன்னால் உங்களை ஜெயித்தால் என்ன பரிசு என்பதை பேசி விடலாம் என்றார்.
முனிவரோ சரி எனக்கு பரிசு தொகை பெரிசாக ஒன்றும் வேண்டாம் ஒரு கட்டத்திற்கு ஒரு அரிசி போதும் என்ற சதுரங்க கணக்கில் கொடுத்தால் போதும் என்று கூறினார் .
கர்வத்தில் மிதந்த மன்னரோ வேறொன்றும் வேண்டாமா …அரிசியை கேட்கறீர் என்று கூறி பின்னர் அதற்கென்ன அரிசிதானே என்று ஒத்து கொண்டார் .
முனிவரும் மன்னரும் விளையாட்டை துவங்கினார். மன்னர் தோற்று போனார் . சவாலில் ஒத்துக்கொண்ட படி ஒரு கட்டத்திற்கு ஒரு அரிசியாக சதுரங்க கட்ட விதிகளின் படி அரிசியை தர துவங்கினார் … முனிவரும் புன்சிரிப்போடு அரிசியை பெற துவங்கினார் …இருபதாவது கட்டத்திலேயே அரிசியின் அளவு ஆயிரம் லக்ஷம் கோடிகள் என ட்ரில்லியன் கணக்கில் ஏறியது .
மன்னரோ தன் ராஜ்யம் …பக்கத்து ஊர் என அனைத்து நிலத்தின் அரிசியையும் தந்தும் முடியாமல் தன் கர்வம் முழுவதும் ஒழித்து முனிவரை வணங்கிய போது பகவான் கிருஷ்ணர் தோன்றி தேவ நாராயண தம்புரானை பார்த்து அழிந்ததா என்று பின்னர் கவலை வேண்டாம் . அரிசியை உடனடியாக கொடுக்க வேண்டாம் உனது கடன் தீரும் வரை இந்த ஆலப்புழை கிருஷ்ணன் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கு அரிசியில் செய்யப்பட்ட பாயசம் செய்து கொடு என்றார்.
இப்போதும் அம்பலப்புழா கிருஷ்ணர் கோவில் பால் பாயசம் பிரசித்தம்!!
