
கமலா தினமும் அந்த நாற்காலியில் சிலை போல அமர்ந்திருப்பாள். கணவர் இறந்து, பிள்ளைகள் வெளிநாடு போன பின் வீடு மௌனமானது. சுவரில் மங்கிய ஓவியம், மடியில் கட்டிய கைகள், வெளிறிய முகம்.
ஒரு மழை நாளில் அந்தக் கருப்பு பூனை வந்தது. சிவப்பு ரோஜாக்கள் படத்தை நினைவு படுத்தியது. இருளிலும் அதன் விழிகள் ரேடியத் துண்டுகளாக ஒளிர்ந்தன. ஏனோ இவளுக்குப் பிடித்துப் போனது.பால் வைத்தாள். அது தினமும் வந்து காலடியில் சுருண்டு படுத்தது.
அவள் அழுதால் உற்றுப் பார்க்கும், சிரித்தால் மடியில் ஏறும்.ஒரு நாள்…கல்லூரித் தோழி இவளைப் பார்க்க வந்தாள்.
“தனியாவா இருக்கே?” என்றாள் .
“இல்லை, நாங்க ரெண்டு பேரும் இருக்கோம்” என்றாள் கமலா, பூனையைத் தடவியபடி.
83 words

மிக உணர்ச்சி பூர்வமான கதை.
கடைசி வரி அருமை.
மிகவும் ரசித்தேன் .
பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்.