
அவள் எப்போதும் வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள திண்ணையில் அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருப்பாள்.
கூடவே அவளுக்கு ஆறுதல் தரப் பூனையும் அமர்ந்திருக்கும்.
சமீபத்தில் அவள் கணவன் விபத்தில் இறந்து விட்டான். அவன் இறந்து போனது அந்த வீட்டின் வெளியே திண்ணைப் பக்கத்தில்தான். அவளுக்கு அந்தத் துக்கம் தாங்கவில்லை. தினமும் அங்கு அமர்ந்து அவனை நினைத்து வாய்விட்டு அழாமல் இருக்கமாட்டாள். அவளால் அவனைப் பிரிந்த துக்கத்தை விட முடியவில்லை. அவன் ஆசையாய் வளர்த்த பூனையும் அவன் இழப்பை நினைத்து அழுது கொண்டிருந்தது.
59
