மடிப்பாக்கம் பிரபாவதி/ஒரு உயிர் நான்கு மனிதர்கள்

அந்த மருத்துவமனை வளாகத்தில் விபத்துக்குள்ளான கணவனை அட்மிட் செய்திருந்தாள் மதி. வாயிக்கும் வயிற்றுக்கும் பத்தாத வருமானம்.
ஐ சி யு வில் கணவன் நிலைமை மோசமாக இருப்பதாகவும், மூளைச்சாவு அடைந்திருப்பதாகவும் சொன்னார்கள்.
விளங்கவில்லை அவளுக்கு. அவனது உறுப்புகள் தானத்தைப் பற்றிக் கூறினார்கள். ஆலோசிப்பதற்குக் கூட யாருமில்லை. நேரமுமில்லை.
கையெழுத்திட்டாள் மதி. போஸ்ட்மார்டம் செய்து தரப்போகிறார்கள். கணவன் ஆசையாக வளர்த்த பூனை இவளை அண்டி வந்து படுத்துக் கொண்டது.
அவன் உறுப்புகள் பொருத்தப்பட்டு நான்கு பேர் பயனடைந்தார்கள். அவன் மனைவி மதி? திக்குத் தெரியாது வீட்டின் ஒரு ஓரமாய் ஸ்டூலில் அமர்ந்திருந்தாள்.
நிறையப் பணம் கிடைத்தது. பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாள்?
கண்கள் கலங்கின.
கதறி அழுவதற்கு உடம்பிலும் மனதிலும் தெம்பில்லை. எல்லாம் முடிந்தாற்போல் இருந்தது. அமைதியாய் இருக்கும்
அவளுடன் பூனையும்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன