
நான் பைத்தியமாம். பறவைகள் விலங்குகள் கூட பேசுகிறேனாம். அதனால் என்னை ஒரு அறைக்குள் தள்ளி விட்டார்கள். என்னோடு தினம் பேசும் லிஸ்ஸிஎனும் கருப்பு பூனை என் அருகிலேயே எப்போதும் இருக்கிறது.
*மியாவ் மியாவ் மியாவ்” என்றதுலிஸ்ஸி.
அதற்கு அர்த்தம், “மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?”
அன்றைக்கு ஒரு நாள் காக்கா எங்கள் வீட்டிற்கு விருந்தாளி வரப்போவதைக் கரைந்து தெரிவித்தது. காலையில் குயில் கத்துகிறது என்கிறார்கள். அதுதன் குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருக்கிறது என்றால் ,”சுமத்ராவுக்குப் பைத்தியம் முத்தி விட்டது” என்கிறார்கள்.
என்ன மனிதர்களோ!
கருப்பு பூனை லிஸ்ஸி வெளியே புறப்பட்டுப் போன வேகத்தில் திரும்பி வந்தது.
“என்ன ஆச்சு லிஸ்ஸி?”
அதன் பாஷையில் லிஸ்ஸி சொன்னது இதுதான்..
“இரையைத் தேடி வெளியே போனேன். குறுக்கே மனிதன் கடக்கின்றான். சகுனம் சரியில்லை”
