கமலா முரளி/நிஜம் சுடும்

காலுக்குக் கீழே படுத்துக் கொண்டிருக்கும் கருப்புப் பூனையை லேசாக மிதித்தாள் பாக்கியம்.
அது சட்டென எழுந்து ”நான் தான் ஷோலாப்பூர் ராஜா. உன்னால் எனக்குச் சாப விமோசனம் கிடைத்தது” எனச் சொல்லித் தன்னை மணந்து கொள்ளுமோ…
கற்பனையில் தான் நடக்கும். கற்பனை சுகமானது. நிஜம் சுமையானது. சுடும்.
“இந்த வீட்டில் இன்னும் எத்தனை நாள் இருக்கப் போகிறேனோ? எனக்கு யாரும் இல்லை, எதுவும் இல்லை. அது தான் நிஜம்”. கண்ணீர் வரவில்லை.
நாலு பேருக்கு மூத்தவளாகப் பிறந்தவள் பாக்கியம். கடைக்குட்டி வாசு பிறந்த போது பக்கவாதம் வந்துவிட்டது அம்மாவுக்கு. அப்போது அழுதது ஞாபகம் இருக்கிறது.
சுட்டுக கொள்ளாமல் சமைக்கப் பழகினாள். தம்பிகளைப் பள்ளிக்குக் கிளப்பி, அம்மாவைக் குளித்து விட்டு, உடை மாற்றி, சாப்பாடு ஊட்டி…
தம்பிகள் உத்தியோகம் வாழ்க்கை எனச் சென்று விட்டனர். ஓடி உழைத்த அப்பா காலமாகி விட்டார். ஆனால், பெற்றவள் இருந்தாள். அவளுக்காகப் பாக்கியமும்.
”அம்மா காலத்துக்கு அப்புறம் வீட்டை வித்திடலாம்”, தம்பிகள்.
போய்விட்டாள் அம்மா. வீட்டை விற்றுவிட்டார்கள். யாரும் அவளைப் பற்றி யோசிக்கவில்லை.
“அம்மா, நீ இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கக் கூடாதா? அழுதாள் பாக்கியம்

124

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன