சந்தியா ஷங்கர்/”சைக்யாட்ரிஸ்ட்”

டாக்டர் அறிவழகன் காலையில் தன் க்ளீனிக்கு வந்தார். வந்ததும் வாசலில் வேலாயி அம்மாயி கண் மூடி பெஞ்சில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார். பக்கத்தில் அவளது வளர்ப்பு பூனையும் இருந்தது.
அறிவழகனுக்கு புரிந்தது.. மறுபடியும் வேலாயிக்கு ஏதோ கனவு வந்திருக்கும் என்று.
” கம்பவுண்டர்! அம்மாயியை உள்ள கூப்பிடுங்க!!”
வேலாயி உள்ள வந்ததும், “என்ன அம்மா! நேத்து என்ன கனவு பாத்தீங்க? ஏரோப்ளேனில ஏறி எங்கலாம் போனீங்க?”
“அறிவு தம்பி!! விமானம் தரையிறங்க மாட்டேனுச்சு. அப்புறம் பைலட்டு தம்பி என்ன கூப்பிட்டு உதவி பண்ணச் சொன்னார்.”
டாக்டருக்கு தெரியும் அம்மாயி வாடிக்கையாக வரும் பேசண்ட் தான். வயசு முத்தி, இருந்த சொந்த பந்தமெல்லாம் விட்டுப் போனதும் ஒருவித மன நோயாளி ஆயிட்டாங்க என்று.
“அப்புறமா பைலட்டுக்கு உதவுனீங்களா? “
“ஆமா!! சேட் ஜீபிடியில படிச்சு தெரிஞ்சுகிட்டேனே”!!
” என்னது? சேட் ஜீபிடியா? அப்படீன்னா என்னன்னு தெரியுமா உங்களுக்கு?”
“ஏன் தெரியாது!! கண்ணை மூடி த்யானம் பண்ணி கடவுளிடம் கேட்டேன். அவரு தான் சேட் ஜீபிடியில பாத்து கத்துக்க சொன்னார். “
” லேப்டாப்பில் மவுசை ஒட்டி பாக்கலாம்னா இந்த ராஜா (பூனை) விட மாட்டேங்குது. அதான் ராஜாவை உங்ககிட்டே சிகிச்சைக்குக் கூட்டி வந்தேன்.”

131

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன