
பத்மஜா தன் அறையிலிருந்து வெளியே வந்து அறைக்கு வெளியே இருந்த மோடாவில் அமர்ந்தாள். பாய்ந்து வந்து அவள் காலடியில் படுத்துக் கொண்டது; அவளது செல்ல பூனை கறுப்பி.
“அம்மா! காலேஜிலிருந்து உங்களைப் பார்க்க வந்திருக்காங்க.” என்றாள், அமிர்தம்மா. ” எதுக்கு? எந்த காலேஜிலிருந்து?”
குரு கடாட்சம் ட்ரஸ்ட் ஃபைலில் கையெழுத்து வாங்கணுமாம்.
நவீன் அவர்களை கூட்டி வந்தான். “அம்மா!
நமது ட்ரஸ்ட்டிலிருந்து உதவித்தொகை பெறுவோரின் லிஸ்ட். நீங்கள் அப்ரூவ் பண்ணி இந்த ஃபைலில் கையெழுத்திடுங்கள். “
பத்மஜா புரியாமல் விழித்தாள். ” என்ன ஸ்காலர்ஷிப்? , எனக்குப் புரியவே இல்லை. நவீன வந்திருந்த அலுவலர்களிடம் ” அம்மாவுக்கு சமயத்தில் சில நினைவுகள் மறந்து போகிறது. என்றவன் பீரோ விலிருந்து, குரு கடாட்சம் ட்ரஸ்ட் ஃபைலை எடுத்து வந்து. தன் அம்மாவிடம் காண்பித்தவுடன், பத்மஜாவின் முகம் மலர்ந்தது. “ஆமாம்! ஞாபகம் இருக்கு” கொடுங்கள். கையெழுத்திடுகிறேன்; என்று சொல்லிக் கையெழுத்திட்டாள், ட்ரஸ்டுக்கு இன்னொரு பத்து லக்ஷத்துக்கு செக் எழுது. என்றவள்; அதிலும் கையொப்பம் இட்டாள். “நன்றி! அம்மா காலேஜுக்கு நிகழ்ச்சியன்று வாருங்கள்;” என்றவர்களைப் பார்த்து, “எந்த காலேஜுக்கு நான் வரணும்?” என்றாள்; முனைவர் . பத்மஜா சுப்பநாராயணன்.
125
