
தண்டு மாமா உள்ளே நுழைந்ததும் செய்த முதல் காரியம் சீதாவையும் பூனையையும் வெளியே அனுப்பியது. சுப காரியம் நடக்கும் போது அபசகுனமாக இவர்களைப் பார்க்கக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தார்.
சீதா வெளியில் வந்து அமர்ந்தாள். அவள் காலடியில் அவளது ஒரே வளர்ப்பு அந்தப் பூனை, சுருண்டு படுத்துக் கொண்டது.
அவளை அறியாமல் அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. பூனை நிமிர்ந்து பார்த்து விட்டு “அபசகுனம்” என்று நக்கலாகச் சிரித்து விட்டு மறுபடியும் ஒடுங்கியது. தங்களைப் பார்த்தால் பிற்பாடு என்ன நடக்குமோ தெரியாது. ஆனால், இந்தத் தண்டுக் கிழவனைப் பார்த்த உடனேயே தாங்கள் தெருவுக்கு வந்து விட்டோமே, தம்பதிகளுக்கு என்ன ஆகுமோ என்ற எண்ணம் தோன்றியதில் அதற்குச் சிரிப்பு வந்திருக்கலாம்.
79
