
அமுதா தன் உறவுகளை இழந்து தனியாக நின்றாள். வாழ்க்கையில் பிடித்தம் இல்லை. நகர வாழ்க்கை மிகவும் சலித்துப் போனது .ஆதலால் தன்னுடைய சொந்த கிராமத்திற்கு மீண்டும் வந்தாள். சிறு வயதில் அவள் வாழ்ந்த ஓட்டு வீடு, ஓட்டை வீடாக இருந்தது .வாசலில் சுவரின் பக்கத்தில் உள்ள ஒரு மேடையில் உட்கார்ந்து பெருமூச்சு விட்டாள்.
அவளுடைய பழைய நினைவுகள் வந்து போனது. அப்பா, அம்மாவுடன் சந்தோஷமாக வாழ்ந்த நாட்கள். தோழிகளுடன் விளையாடின பொழுதுகள் எல்லாம்.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு தான் தெரியும் அவளுடைய அப்பா, அம்மா சொந்த பெற்றோர்கள் இல்லை. வளர்த்த பெற்றோர்கள் என்று.
சிறு குழந்தையிலேயே அனாதை ஆசிரமத்தில் இருந்து தூக்கி வந்து சொந்த மகள் போல் வளர்த்து இருக்கிறார்கள்.
தற்போது மீண்டும் அனாதை.
அவள் தன்னைப் பற்றி யோசித்துக் கொண்டே இருக்கும் போது, ஒரு கருப்பு பூனை மெதுவாகப் பயந்தபடி அவள் அருகே வந்தது.
அவள் மெதுவாக அதன் முதுகைத் தடவியபடி” நீதான் இனி எனக்குத் துணை” என்று அதனுடன் பேச ஆரம்பித்தாள்.
111
