
“என்ன அம்மம்மா இது, ஒரு போட்டிக்கு உன்னிடம் ஓவியம் வரையச் சொன்னா நீ இப்படிப் பூனையோடு தனியே ஒரு பெண்மணி உட்கார்ந்து இருக்கிற படத்தை வரைஞ்சு வைச்சிருக்கே. ஹும் பரிசு கிடைக்க வாய்ப்பே இல்லை”. என்று கோபப்பட்ட பேத்தி ஷாலினியிடம் “இங்கே பாரு ஷாலு, உன் தாத்தா இறந்த பிறகான என் நிலைமையோ, என் மனநிலையோ புரியும் வயசில்லை. ஆனால் நீ இதைப் போட்டிக்கு அனுப்பி வை. கண்டிப்பாகப் பரிசு கிடைக்கும்” என்றாள் அவளின் அம்மாவைப் பெற்ற தாய் மங்களம்.
அதே போல அந்த ஓவியப் போட்டியின் நடுவர் “இந்த ஓவியத்தில் அந்தப் பெண்ணின் தனிமையும், அவளின் ஒரே துணை அந்தப் பூனை தான் என்பதும் அவர்களுக்கிடையே இருக்கும் ஆழமான பிரியமும் தெரியும்படி தத்ரூபமா வரையப் பட்டிருக்கு . அதனால் இதையே நான் முதல் பரிசுக்குத் தேர்ந்து எடுக்கிறேன் ” என்று மைக்கில் சொன்ன போது தான் ஷாலினிக்குத் தன் அம்மம்மாவின் தனிமையும் அவங்க மனநிலையும் புரிய இனி தான் அடிக்கடி அவர்களைப் பார்க்கப் போகணும் என்று மனசில் தனக்குள் தீர்மானித்தாள் .
119
