சாந்தி சந்திரசேகரன்/இரவின் மடியில்..!

ரதி.. வழி மேல் விழி வைத்து ரகுவுக்காகஅந்த வீட்டின் தாழ்வாரத்தில்.. சுவரில் சாய்ந்தபடி காத்திருந்தாள்.
கல்யாணம் ஆன புதிதில் இருந்தே அவள் அப்படித்தான்.
ரகுவிற்கு அவன் பணி முடிந்து வீட்டிற்கு வரக் குறைந்த பட்சம் பதினோர் மணியாவது ஆகும்.
அவன் சொன்னாலும் கேட்க மாட்டாள். ஒரு பத்து மணி வரை.. அவன் தாயும்.. தங்கையும் உடன் இருப்பார்கள்.
அவர்கள் உறங்கிய பிறகு, அவள் மற்றும் அவளது பூனை.. அவனுக்காகக் காத்திருப்பார்கள்.
அதில் அவளுக்கு வருத்தம் இருந்ததில்லை. ஊரடங்கிய பிறகான அந்த இரவு நேரத்தின் மீது ஏனோ அவளுக்கு மையல்.
கோட்டான் சத்தமும், நாய்களின் குரைப்பும், ஊளைக்காற்றும்.. ஒரு வித அமைதியும்.. அவள் பகல் நேரத்து இரைச்சல்களில் இருந்து மாறுபட்டிருந்தது அவளுக்குப் பிடித்திருந்தது.
நிலவும் மேகத்தினுள் முகம் புதைத்து அவளுடன் கண்ணாமூச்சி ஆடும்.
அதோ அவள் கணவன் வருகிறான் என்று அந்தத் தெருவின் ஆரம்பத்தில் அவன் திரும்பிய உடனே அவளது பூனை அவளிடம் ‘மியாவ்’ என்று சங்கேத மொழியில் சொல்லும்.
அந்த பிறை நிலவைப் போல, அதுவரை சிலையாய்
அமர்ந்திருந்த அவள் இதழ்களில் ஒரு புன்சிரிப்பு கூடும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன