செல்லம் சேகர்/மந்திர புன்னகை

மிருதுளா மிகக் கவலையோடு வாசல் தாழ்வாரத்தில் உட்கார்ந்திருக்கிறான் . அவள் காலடியிலேயே அவள் வளர்க்கும் பூனை ஜிகிடியும் அமர்ந்து இருந்தது .
காரணம் வெளியூர் சென்ற கணவன் பற்றி வந்த கைப்பேசி தகவல் . பார்த்திபன் மலைப்பாதையில் விழுந்து காலில் எலும்பு முறிவும், கண்ணிலும் நல்ல அடி என்று வந்த தகவலே !!
இரண்டு நாள் கழித்து இன்றுதான் கண்விழித்து மலைக்கிராம மக்களுடன் இரவுக்குள் கோவைக்கு வருவதாகத் தகவல் ..
திருமணமாகி இந்த எட்டு ஆண்டுகளுமே எந்த ஊர் சென்றாலும் சென்று இறங்கியதைத் தகவல் தெரிவிப்பதோடு சரி …திரும்பும் நாள் தகவல் வரும் …இடையில் பேசும் வழக்கமே கிடையாது
அதிலும் தற்போது ஒரு எஸ்டேட்க்கு சிசிடிவி கேமரா அமைக்கச் சென்றபோது இப்படி நேர்ந்துள்ளது .
மிருதுளா முதுகலை பட்டதாரி .
திருமணம் ஒரு நிர்ப்பந்தத்தில் உறவில் நடந்தது . மாமியாரைப் பார்த்துக் கொள்ள வேண்டும் வேலைக்குச் செல்லக் கூடாது என்று கண்டிஷன் போட்டு ஒரு திருமணம் . .
மகள் மாதவியின் பிறந்த பிறகும் கணவன் .பார்த்திபனின் ஆணாதிக்க போக்கு மிருதுளா வேலைக்குச் செல்வதை விரும்பவில்லை . மிருதுளாவின் செல்ல பூனை ஜிகிடியிடம் மட்டுமே தன் குமுறலைக் கொட்டுவது வழக்கம் .
அவளது சுகமான ரகசியம் அறிந்ததும் இந்த ஜிகிடி பூனையே .
ஜிகிடியை பார்த்திபனுக்குப் பிடிக்காது …
கால் கண் என்று அடி என்றால் பயமாக உள்ளதே என்ற கவலை வாட்ட தன் நிலையை எண்ணி வருந்திய படி அமர்ந்து இருந்தாள் மிருதுளா .
இரவு நெருங்கும் நேரம் இருவர் கைதாங்கலாகக் கண்ணில் கட்டோடு பார்த்திபன் வீடு வந்து இறங்கினான் .
கணவனைக் கண்டவள் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் .
கதவு இடுக்கில் இருந்து பார்த்த ஜிகிடி பூனை அழாதே என்பது போல் சிறு குரலில் மியாவ் என்றது .
கணவன் பூனையை ஒன்றும் சொல்லவில்லை .
மனைவிடம் ” மித்து என் கண் சரியாக ஒரு மாதமாகுமாம் . கால்கள் நடக்க வண்டி ஓட்ட ஓரிரு மாதங்கள் ஆகும் . படித்த உன்னை வேலைக்குச் செல்ல கேட் போட்டேன் . இன்று எதிர்காலம் பயமாக உள்ளது . மாதவி படிப்பு வீட்டுத் தவணை ..” என்று கண்கலங்கினான்
“அதெல்லாம் பிறகு பார்க்கலாம் இப்போ கண்ணில் நீர் எதற்கு …ஸ்ட்ரைன் பண்ணாதீங்க “
அப்போது மியாவ் என்று ஜிகிடி பூனை மிருதுளாவின் பையை இழுத்து வந்து தந்தது ..
ஒற்றை கண்ணால் ஜிகிடியை பார்த்த பார்த்திபன் “உன்னை வேலைக்கு அனுப்பினாலும் யார் என்னைக் கவனித்துக் கொள்வார்கள் “என்று கண்கலங்கிப் போனான் அப்போது வந்த கைப்பேசி ஓசைக்கு மிருதுளா “உங்கள் பள்ளிக்கும் உங்கள் நட்பு பள்ளிகளுக்குமான மாதிரி வினாத்தாள்களை ஓரிரு நாட்களுக்குள் அனுப்பி விடுகிறேன் கணிதம் அறிவியலுக்கு நான் தயார் செய்து தரும் மாடல் பேப்பர்கள் மாணவர்களுக்கு மிகுந்த பயனாக உள்ளது என்னும்போது நிச்சயம் லேட் செய்ய மாட்டேன் “
ரகசியமாக மூன்று ஆண்டுகளாகப் பள்ளி மாணவர்களுக்கு மாதிரி தேர்வுத்தாள்கள் தயார் செய்து பணம் சம்பாதித்ததைக் கணவனிடம் பகிரங்கமாகச் சொன்னாள்
ரகசியத்தை அம்பலப்படுத்திய ஜிகிடியை நன்றியோடு பார்த்தாள் .

325

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன