எஸ்ஸார்சி வாசித்த கவிதைகள்

இணையக் கவியரங்கம்

  1. வாடகைக்கு விட்டுப்பார்.

வாடகைக்குக் குடியிருப்போர்
வீட்டைக் காலி செய்யும் வரை ஓயாமல் முறை வைப்பார்
வீட்டில் அது இல்லை இது இல்லை எதுவும் சரியில்லை. வீட்டைக்காலி
.செய்வது உறுதியாகி வேறு வீட்டுக்கு அட்வான்ஸ்
கொடுத்தனரோ
அவ்வளவு தான் அவர்கள் பார்வை மேலேதான் குடியிருந்த வீட்டின் உட்சுவரெல்லாம்
பிஞ்சுகளின் கிறுக்கல் ஓவியங்கள்
சமையல்
சிங்க் ஒழுகும் பாத் ரூம்
டைல்ஸ் வழுக்கும்
டாய்லெட் டில் தண்ணீர் அழும் விழும்
ஸ்விட்ச் போர்டு
இளித்துச் சிரிக்கும்
எந்தக் குழாயும் திருகவராது
கேஸ் சிலிண்டரின்
இழுவைக்கொடை
தரையில் அங்கங்கே
உடைப்பு
கொடுத்த பூட்டுக்கள்
எதுவும் வராது
ஒத்த சாவியாய்த் திருப்பித் தருவர் பத்திரமாய்
சுவரில் சுண்ணம்
கோவிந்தாவெனப் பல்லிளிக்கும்
ஏன் அச்சம் கொடுத்த
அட்வான்சில் கழி
உங்கள் யோசனை
மூன்று மாதமாய் வாடகை வரவில்லை
அட்வான்சில் எடு
கச்சிதமாய்க் கணக்கு
சொன்னார் அகம்பாவமாய்
வாடகைக்கு த்தான் விட்டுப்பாருங்களேன்
உங்கள் வீட்டை.

2.அரசியல்

எங்கும் அரசியல்
எதிலும் அரசியல்
கட்சியில் சேர்ந்தால்
கணம் கணம் அரசியல்
சங்கத்தில் சேர்
பொறுப்புக்களைத் தீர்மானிக்கும் அரசியல்
இலக்கிய அரங்கமா
அசடுக்குப்புரியாத நுண்ணரசியல்
அழகாய்ச்
சொல்வார்கள்
அரசியல் கலவாமல்
எழுதுங்கள் கவிதை
அதுவுமே அரசியல்
மலரை மகளிரை
தாயைத் தனயனை
வானைக்கடலை
மலையை அருவியை
காகத்தைக் கொக்கைப்பார்
கெஞ்சு கொஞ்சு
எழுது கவிதை
யார் செத்தாலென்ன
யார் பிழைத்தாலென்ன.

3. தேவர் மகான்

சாதிமதம் கடந்த மகான்
தேவர் முத்துராமலிங்கரைப்போற்றுவோம்
தெய்வீகத்தையும் தேசத்தையும் தன்னிரு
கண்களாய்க் கொண்டாடிய ஆழம் கூடிய அற்புதம்
உணவால் சைவ த்துக்கு மாறிய
அகவினத்தார் வள்ளல்
இராமலிங்கரை ஆராதித்த பெருமகன்
நேதாஜிக்குத் தமிழ் மண்ணில் வீரர்களைத் திரட்டிய தேசபக்தர்
மதுரை மீனாட்சி ஆலயத்தில் அரிசனங்கள் பிரவேசிக்க முன்கை
எடுத்த வைத்தியநாத அய்யருக்கு அரண்
தேசப் பிரிவினையின் போது தமிழக இசுலாமியர் நம்மோடு இருப்பர்
உரக்கக் குரல் கொடுத்த நேர்மையாளர் மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட
பாராளுமன்ற உறுப்பினர்
நம்ப முடிகிறதா உங்களால்.
தேவருக்குச் சரியானதொரு
அரசியல் வாரிசுக்குத்தான்
எத்தனைக் காலமாய்த்
தவம் கிடக்கிறது
தமிழகம்.

  1. இணையகால கவிதை

எத்தனை சவுகரியம்
இணைய கால கவியரங்கம்
சீவி சிங்காரித்துக்
கொள்ள வேண்டாம்
அழுக்குத் சட்டையை
மாற்ற வேண்டாம்
சுவாமிக்கு உண்டியலில் போடுகிறமாதிரி
விருட்சம் உண்டியலில்
போட்டு விட்டுப் போகலாம்
எல்லார் கவிதை யையும் கேட்க வாய்ப்பு
கவிதை விமரிசனங்கள்
ஏனோ தானோ என்றில்லை
நச்சென்றுதான்
காற்றோடு போய்விடுமோ
நாம் வாசித்த கவிதை
என்ற கவலை மட்டுமே உண்டு.


5. அறம் செய விரும்பு

அனாதை இல்லம்
நிச்சயம் உதவி
செய்ய வேண்டும்
என்று போனால்
அப்படி ஒன்றும்
உங்களை வா வா
என்றழைத்து
நாற்காலி போட மாட்டார்கள் கொடுங்கள் வாங்கிக் கொள்கிறோம்
என்கிறார்கள் வேண்டா வெறுப்பாய்
அதற்குமேல் ஒன்றுமில்லை


6. பொது நியாயம்

யாரேனும் ஒரு கன்னத்தில் அறைந்தால் நீ
மறு கன்னத்தையும் காட்டு
சொல்லிவிட்டுச்
சிலுவைக்குச் சென்றார் இயேசு
வாடிய பயிரைக்கண்ட
போதெல்லாம் வாடினேன் வருந்தினார்
அருளாளர் இராமலிங்கர்
வள்ளலுக்குப்பின்னர்
வாடிய பயிருக்கு
யாரேனும் வாடினாரா என்ன?
காவிரியில் தண்ணீர் விடாதே அதற்கு
ஒரு பந்த் கர்நாடகாவில்.
காவிரியில் தண்ணீர்
திறந்துவிடு
அதற்குக் கடையடைப்பு தமிழ் மண்ணில்
உச்ச நீதிமன்றம் உண்டு
காவிரி நீர் ஒழுங்காற்றுக் கமிட்டி
உண்டு எல்லாம் தானுண்டு
யார் சொல்வதையும் யாரும்
கேட்கப் போவதில்லை
பொதுவாய் நியாயம் சொல்ல ஆளும் இல்லை
கேட்க இங்கு மனிதர்களும் இல்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன