அர்ஜுனன்/வேலை கிடைச்சிடுச்சு

வேலுவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. முழங்கால்களை மடக்கி, நாற்காலியில் கவலையுடன் அமர்ந்திருந்தார்.
முகத்தில் ஒரு மாத தாடி முள்ளாய் வளர்ந்திருப்பது கூட பெரிதாகத் தோன்றவில்லை. மனைவிக்கும், தனக்குமான சாப்பாட்டுத்
தேவைக்குக் கூட சம்பாதிக்க முடியாமல் போய்விட்டதே என மனதில் புழுங்கினார்.
சிம்சன் பாக்டரியில் வேலை செய்தவரையில் வாழ்க்கை எந்த பிரச்சினையும் இல்லாமல் போய்க் கொண்டிருந்தது.
விபத்தில் ஒருநாள் கனமான பொருள் ஒன்று காலில் விழுந்துவிட, அதன்பின்
நீண்டநேரம் நின்று வேலை செய்ய முடியாமல் போய்விட்டது.
பணியிடை நீக்கத்திற்குப் பிறகு, கையிலிருந்த சேமிப்பு எவ்வளவு காலம் தாங்கும்?
ஐம்பது வயதிற்குப் பிறகு, கடைகளில் யாரும் வேலைக்கு எடுப்பதற்குத் தயாராயில்லை.
மூட்டை தூக்கும் வேலைகளுக்கு இப்போது எந்திரங்கள் வந்துவிட்டதால், அதற்கும் செல்ல முடியவில்லை.
“இப்படி விட்டத்தைப் பார்த்து உட்கார்ந்திருந்தால் சம்பாத்தியம் வந்திடுமா?”
மனைவியின் கேள்வியில் எகத்தாளம் இருந்தாலும், அது ஒரு வித்தியாசமான யோசனையைக் கொண்டு வந்தது.
இந்த வயதில், உட்கார்ந்த நிலையில் சம்பாதிக்கக் கூடிய தொழில், அடுக்குமாடிக் குடியிருப்பு காவலாளி வேலை தான்.
‘நாளைக்கே அதற்கான ஏஜென்சியில் சென்று விசாரிக்க வேண்டும்’ என முடிவு செய்து, நிம்மதியாகத் தூங்கினார்.

(122 வார்த்தைகள்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன