
அவருக்குள் அந்த மஹாலக்ஷ்மித் தாய் மட்டும்தான் . நாற்காலி மேல் , மடங்கிய கால்களும், உயர்ந்த கைகளும் தவக்கோலக் காத்திருப்பு.
சென்ற மாதம் , ஆசிரம நிர்வாகி கோபாலுக்குத் தொலைப்பேசி ‘ நியூயார்க் விமானத்தில் பார்த்தேன். கண்ணீர்த்துளி பளபளத்தது. திரும்பவும் நுழைந்து விட்டாள். பழைய மேனகையாய் இல்லை, புதிய மஹாலக்ஷ்மியாய் , அருள் ஒளியாய்.’
‘ கும்பிட வேண்டிய அழகைக் காட்டி விட்டு , சென்று விட்டாள் . உன்னிடம் வரவேண்டிய நேரம் வந்து விட்டது ‘ . பதிலுக்குக் கோபால் . ‘ வா’ .வந்து விட்டார்.
உடலின் தேவைகள் குறைந்து , உணவும் குறைந்தது. கழிப்பறை நாட்களும் குறைந்தன. சுவாசத்தின் தவிப்பும் குறைந்தது. ஐம்பூத நாயகியின் ஆட்டத்துக்குள் , அவரின் ஐம்புலன்களும் ஒடுங்கிக் கொண்டு இருந்தன.
அறைக கதவைச் சாத்த வந்தார் கோபால். வளைந்த கால்கள் இறங்கி தரையில், நிமிர்ந்த கைகள் இறங்கிக் கும்பிடும் நிலையில் , கண்கள் கோபாலைப் பார்த்தன. இதழ்கள் , ‘நன்றி நண்பா ‘ என்றன . மறுநாள் கதவைத் திறந்தபோது நாற்காலி மட்டுமே இருந்தது.
118
