
ஏகாம்பரம் கதவைத் தாழ் போட்டுவிட்டு, சாய்வு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தார். இரண்டு கைகளையும் தலைக்குப் பின்னால் அண்டக் கொடுத்து சௌகரியமாக. உட்கார்ந்தார்; மனதில் சூறாவளி சுழன்று அடித்தது.
பாகீரதி போய் ஆறு மாதங்கள் ஆயிற்று.மகன் சீனுவும், மருமகள் சாந்தாவும் காலை ஒன்பது மணிக்குப் போனால், மாலை ஆறு மணிக்குத்தான் வருவார்கள். மதியம் சாப்பாடு, தயாராக ஹாட் பேக்கில் இருந்தது. அவள் இருந்தவரை நிதானமாக சமைத்துச் சேர்ந்தே சாப்பிடுவார்கள். பேசுவதற்கு அவர்களுக்கு அவ்வளவு விஷயம் இருக்கும். அன்றைய செய்தியிலிருந்து. அடுத்த வீட்டு நடப்பு வரை ஏதேனும் விஷயம் இருந்து கொண்டே இருக்கும். . மதியம் டிவி, சீரியல் பார்ப்பார்கள். சிறிது நேரம் உறங்கி எழுந்ததும்; மணக்கும் காஃபி கையுடன் பாகீரதியை எழுப்புவார். பரபரப்பின்றி, கோயிலுக்கோ, மாலை நடைக்கோ செல்வார்கள். ஒரு நாள் ஒரு நிமிடம் போல் பறந்து விடும். தோழமைக்கு ஒரு மனம் இல்லாமல், பேசுவதற்கு ஒரு துணை இல்லாமல், பார்த்து மகிழ்வதற்கு ஒரு முகம் இல்லாமல் இருக்கும், வேதனையில் கண்ணை மூட , பாகீரதி கண் முன் நின்று புன்னகை பூத்தது; மனதுக்கு உற்சாகமாய் இருக்க; தூங்கி எழுந்தவர் இரவு உணவு தயார் செய்யவும், சீனுவுக்கு காஃபி டிகாஷன் போடவும் ஆயத்தமானார்
133
