அழகியசிங்கர்/எங்கள் தெருவிலும் பிள்ளையார்!

மூன்று ஆண்டுகளாய்
பிள்ளையார் வருகிறார்
ஒரு வாரம் எங்களுடன் இருக்கிறார்
காலை பொங்கல்
மாலை விதம்விதமாய்

எங்கள் தெருவிலும் பிள்ளையார்

ஒவ்வொரு வீட்டிலிலும் விதம்விதமான
தின்பண்டங்கள்
தினம் தினம்
பிள்ளையார் முன்
தெருவில் உள்ளவர்கள்
பக்தியுடன் படைக்கிறார்கள்
பரவசத்துடன் வேண்டுகிறார்கள்

எங்கள் தெருவிலும் பிள்ளையார்

தெருவில் உள்ளவர்களை
இந்தத் தருணத்தில்
அறிய முடிகிறது
பேச முடிகிறது
காரணம் எல்லாம்
பிள்ளையார் ஒருவரால்

எங்கள் தெருவிலும் பிள்ளையார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன