செல்லம் சேகர்/பசுமை பாதுகாப்பு

மாயா பதினோர் வயது சிறுமி .  வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் இங்கு வந்து வந்து செட்டில் ஆனவள் .  இயற்கையை நேசிப்பவள் . புத்தக பிரியை. ரசனை மிக்கவள் . பசுமையான இடங்களைக் கண்டால் தன்னை மறந்த நிலையில் குருவி பட்டாம்பூச்சி பறவைகள் எனப் பேசக் கூடியவள் . 

அன்று கடற்கரைச் சாலையில் தந்தையோடு செல்லும்போது ஒரு இடத்தில் காரை நிறுத்த  சொல்கிறாள்.  அழகான எரியும் அதன் அருகில் உள்ள மரங்களும்,  பறவைகளின் ஒலிகளும் மாயாவை  நிற்க வைத்து விட்டது.

மாயா  அழகான பச்சைநிற உடை அணிந்து கையில் காம்போடு கூடிய பூவையும் வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.  அப்போது விசித்திரமான பச்சைநிற இறகுகளைக் கொண்ட ஆரஞ்சுநிற அலகுமாக ஒரு பறவை மாயாவை  ஒரு செடியாக  நினைத்து அவள் தலையில் அமர்ந்து எதிரில் தெரிந்த  உலக வரைபட பலகையைக் காட்டி ஏதோ கூறியது .

 அதன் குரல் மாயாவின் செவிகளில் ” அக்கா பரந்த உலகில் எல்லையில்லாமல் காடு, மரங்கள் எனச் சந்தோஷமாகப் பறந்து கொண்டிருந்தோம் …சிறிது சிறிதாக மரங்களை வெட்டி காடுகளை அழித்து வறட்டு பூமியாக்கி வருகிறது மனித இனம். எங்களைக்  காப்பாற்றுங்கள். “

”  எங்கள் தலைமுறை காடுகளை அழிக்காது …உங்கள் இனம் வாழக் காடுகளை வளர்ப்போம் “ என்று உறுதி கூறினாள் மாயா

142

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன