
1.
மாங்கனி பெறவே மயில் மீதேறி
உலகைச் சுற்றித் தம்பி திரும்புமுன்
பெற்றோரைச் சுற்றிக் கனியை வென்ற
விநாயகா! எனக்கென் குறை?
2.
ஆனைமுகம் ஐந்துகரம் அகிலத்தைக் காத்திடும்
சேனைத் தலைவனுக்கு முன்னவனாய்த் திகழ்ந்து
ஞாலம் நலமுற நல்லோன் நீயிருக்க
விநாயகா! எனக்கென் குறை?
பரமனது இரதத்தின் அச்சை முறித்தாய்
மகாபாரத நிகழ்வை எழுத்தில் வடித்தாய்
முழுமுதற் கடவுளாய் கருத்தில் நின்றாய்
விநாயகா! எனக்கென் குறை? –
