தங்கேஸ்/ஹேப்பி பர்த்டே டூ யூ விநாயகா

ஹேப்பி பர்த்டே டூ யூ விநாயகப் பெருமானே !

எத்தனையோ கடவுள்களுக்கு
பிறந்த நாள் வந்தாலும்
உங்கள் பிறந்த நாளைத்தான்
ஊரெல்லாம் விழாவாக கொண்டாடுகிறது

சினிமா நடிகர்களைப் போல
விதம் விதமான தோற்றங்களில்
வண்ண வண்ணச் சிலைகள்

காதை துளைக்கும்
குத்துப் பாடல்கள்
திசைகளை அதிர வைக்கும்
மேளதாளங்கள்

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
பானை வயிற்றோனுக்கு
படைக்கப்படும்
அபரிதமான உணவு
கொழுக்கட்டை சுண்டல் பொரி கடலை
போதும் போதும் என்றாலும்
யார் விடுவது ?

எல்லாம் இருந்தும் என்ன
முகத்தில் புன்னகை இல்லையே நண்பா ?

எந்த நேரத்தில் எவன் ஆற்றில் தூக்கி
வீசப் போகிறானோ யாருக்குத் தெரியும் ?

ஒரு நாள் ஓய்வாக உட்காரலாம் என்றால்
விடுகிறானா போலிஸ்
ஊர்வலம்போகும் வழியெல்லாம்
ஒரே திக் திக் திக் தான்

கடலில் அடிக்கும் அலையெல்லாம்
மனதில் தான் அடிக்கிறது

என்ன இருந்து என்ன ?
அந்தக் காலத்தில்
ஆற்றங்கரை அரச மரத்தடியில் அமர்ந்து
ஓடும் தண்ணீரை நாளெல்லாம்
வேடிக்கை பார்த்த சுகம்
இனி மேல் திரும்பி வருமா சொல்லு ?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன