சசிகலா விஸ்வநாதன்/விநாயகா! எனக்கென் குறை?

(1)

பூலகத்தில் யாவருக்கும் பொன்னைய தெய்வமிது.
பேராதரவாய் மாதா பிதா குரு வென
என் மனதில் நீர் குந்தியிருக்க;

விநாயகா! எனக்கென் குறை?

(2)
நல்லோசை தரும் வாணி, நீர்
தலை அசைக்க,
நாவிலே அமர்ந்தாள்!
நான்முகனும் தலையெழுத்தை மாற்றி எழுத;

விநாயகா! எனக்கென் குறை?

செந்திருவும் செல்லாதிருப்பாள்;
என்னில்லம் விட்டு.
செஞ்சடையான் பாகத்தாளும்
பிரியாதிருப்பாள்; என்னிடம்.
வெண்மலராள் குடியிருப்பாள் நின் அருளால்.

விநாயகா! எனக்கென் குறை

வேண்டாத நினைவுகளை நீர் அகற்றிட,
வேண்டும் அத்தனையும் விரும்பியே தர
வேறென்ன வேண்டும்; சொல்; நீரே!

விநாயகா! எனக்கென் குறை?

கடல் கடந்தே நீர் சென்று,
உன் ஆடல் அங்கு நடத்த;
என் ஆணை உனக்கு; என்றேன்!

விநாயகா! எனக்கென் குறை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன